குர்ஆன் 64:14 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்
நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் மற்றும் உங்களு டைய பிள்ளைகளும் உங்களுடைய விரோதி களாக இருக்கக்கூடும்; எச்சரிக்கை. நீங்கள் பிழை பொறுத்து, மறந்து, மேலும் மன்னித்து விட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[64:13] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[64:15] உங்களுடைய பணம் மற்றும் பிள்ளைகள் ஒரு சோதனையாகும், மேலும் மகத்தானதொரு பிரதிபலன் கடவுள் வசமுள்ளது.