குர்ஆன் 65:11 — விவாகரத்து
ஒரு தூதர்* நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான காரியங்கள் புரிவோரை இருளி லிருந்து வெளியேற்றி ஒளிக்குள் வழி நடத்து வதற்காக, கடவுள்-ன் வெளிப்பாடுகளை, தெளிவாக உங்களுக்கு ஓதிக் காட்டுகின்றவர். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றாரோ, அவரை ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர் அனுமதிப்பார்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். கடவுள் தாராளமாக அவருக்கு வெகுமதியளிப்பார்.
[65:10] கடுமையான தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்துள்ளார். ஆகை யால், அறிவுத்திறன் உடைய நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கொரு தூதுச்செய்தியை* இறக்கி அனுப்பி இருக்கின்றார்-
[65:12] கடவுள் ஏழு பிரபஞ்சங்களையும் மேலும் அதே எண்ணிக்கையிலான பூமிகளையும் படைத்தார். அவற்றிற்கிடையே கட்டளைகள் பாய்ந்து செல்கின்றன . இது, கடவுள் சர்வ சக்தியுடை யவர் என்பதையும், மேலும் கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவேயாகும்.