குர்ஆன் 65:12 — விவாகரத்து
اللَّهُ الَّذى خَلَقَ سَبعَ سَمٰوٰتٍ وَمِنَ الأَرضِ مِثلَهُنَّ يَتَنَزَّلُ الأَمرُ بَينَهُنَّ لِتَعلَموا أَنَّ اللَّهَ عَلىٰ كُلِّ شَيءٍ قَديرٌ وَأَنَّ اللَّهَ قَد أَحاطَ بِكُلِّ شَيءٍ عِلمًا
கடவுள் ஏழு பிரபஞ்சங்களையும் மேலும் அதே எண்ணிக்கையிலான பூமிகளையும் படைத்தார். அவற்றிற்கிடையே கட்டளைகள் பாய்ந்து செல்கின்றன . இது, கடவுள் சர்வ சக்தியுடை யவர் என்பதையும், மேலும் கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவேயாகும்.
[65:11] ஒரு தூதர்* நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான காரியங்கள் புரிவோரை இருளி லிருந்து வெளியேற்றி ஒளிக்குள் வழி நடத்து வதற்காக, கடவுள்-ன் வெளிப்பாடுகளை, தெளிவாக உங்களுக்கு ஓதிக் காட்டுகின்றவர். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றாரோ, அவரை ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர் அனுமதிப்பார்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். கடவுள் தாராளமாக அவருக்கு வெகுமதியளிப்பார்.