குர்ஆன் 67:16 — அரசுரி
வானத்தில் உள்ள அந்த ஒருவர் பூமியைத் தாக்கி அதனை உருண்டு விழும்படிச் செய்து விட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா?
[67:15] அவர்தான் பூமியை உங்களுடைய பணிக்கென அமைத்தவர். அதன் மூலைகளில் சுற்றித் திரியுங்கள், மேலும் அவருடைய வாழ்வாதாரங் களிலிருந்து உண்ணுங்கள். இறுதியான அழைப்பு ஆணை அவருக்குரியது.
[67:17] வானத்தில் உள்ள அந்த ஒருவர் உக்கிரமான தொரு புயலை உங்கள் மீது அனுப்பி விட மாட்டார் என்று நீங்கள் உத்திரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? அதன் பிறகாவது என்னுடைய எச்சரிக்கையின் முக்கியத் துவத்தை நீங்கள் சரியாக மதிப்பிடுவீர்களா?