Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:17 — அரசுரி

வானத்தில் உள்ள அந்த ஒருவர் உக்கிரமான தொரு புயலை உங்கள் மீது அனுப்பி விட மாட்டார் என்று நீங்கள் உத்திரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? அதன் பிறகாவது என்னுடைய எச்சரிக்கையின் முக்கியத் துவத்தை நீங்கள் சரியாக மதிப்பிடுவீர்களா?

[67:16] வானத்தில் உள்ள அந்த ஒருவர் பூமியைத் தாக்கி அதனை உருண்டு விழும்படிச் செய்து விட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா?

[67:18] அவர்களுக்கு முன்னர் மற்றவர்களும் நம்ப மறுத்துள்ளனர்; என்னுடைய பழி தீர்த்தல் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!