குர்ஆன் 67:23 — அரசுரி
“அவர்தான் உங்களைத் துவக்கியவர், மேலும் செவிப்புலனையும், கண்களையும், மற்றும் மூளைகளையும் உங்களுக்கு அளித்தவர். அரிதாகவே நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[67:22] தன்னுடைய முகத்தின் மீது குப்புற வீழ்ந்தவாறு நடக்கின்ற ஒருவன் சிறப்பாக வழி நடத்தப் பட்டவனா, அல்லது சரியான பாதையில் நேராக நடக்கின்ற ஒருவனா?
[67:24] “அவர்தான் பூமியின் மீது உங்களை அமைத்தவர், மேலும் அவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப் படுவீர்கள்” என்று கூறுவீராக.