குர்ஆன் 67:27 — அரசுரி
அது நிகழ்வதை அவர்கள் காணும்பொழுது, நம்பமறுத்தவர்களின் முகங்கள் துக்ககரமான தாக மாறிவிடும், மேலும்: “ இதுதான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது” என்று பிரகடனம் செய்யப்படும்.
[67:26] “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் உள்ளது; நான் தெளிவானதொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.
[67:28] “கடவுள் என்னையும் மேலும் என்னுடன் இருப் பவர்களையும், அழித்துவிடவோ, அல்லது அவருடைய கருணையைக் கொண்டு எங்கள் மீது பொழியவோ தீர்மானித்த போதிலும், வலி நிறைந்த தொரு தண்டனையிலிருந்து நம்பமறுப்பவர் களைப் பாதுகாக்க யார் இருக்கின்றார்?” என்று கூறுவீராக.