Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:101 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அந்தச் சமூகங்களின் சரித்திரத்தை நாம் உமக்கு எடுத்துக்கூறுகின்றோம்: அவர் களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், எதனை ஏற்க முன்னரே மறுத்து விட்டனரோ, அதில் அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. இவ்விதமாக, நம்பமறுப்பவர்களின் இதயங்களில் கடவுள் முத்திரையிட்டு விடுகின்றார்.

[7:100] முந்திய தலைமுறையினர்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசுகளாக ஆனவர்களுக்கு, நாம் நாடினால், அவர்களுடைய பாவங்களுக்காக நாம் அவர்களைத் தண்டித்து விட இயலும் என்றும், மேலும் அவர்கள் செவிடர்களாக மாறிப்போகும்படி, அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விட இயலும் என்றும் ஒருபோதும் தோன்றாதா?

[7:102] அவர்களில் பெரும்பாலோரை, அவர்களுடைய உடன்படிக்கைகளை அலட்சியம் செய்பவர் களாகவே நாம் கண்டோம்; அவர்களில் பெரும்பாலோரை தீயவர்களாகவே நாம் கண்டோம்*.