Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:102 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர்களில் பெரும்பாலோரை, அவர்களுடைய உடன்படிக்கைகளை அலட்சியம் செய்பவர் களாகவே நாம் கண்டோம்; அவர்களில் பெரும்பாலோரை தீயவர்களாகவே நாம் கண்டோம்*.

[7:101] அந்தச் சமூகங்களின் சரித்திரத்தை நாம் உமக்கு எடுத்துக்கூறுகின்றோம்: அவர் களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், எதனை ஏற்க முன்னரே மறுத்து விட்டனரோ, அதில் அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. இவ்விதமாக, நம்பமறுப்பவர்களின் இதயங்களில் கடவுள் முத்திரையிட்டு விடுகின்றார்.

[7:103] (அந்தத் தூதர்களுக்கு) பிறகு, ஃபேரோ விடமும் அவனுடைய மக்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் மோஸஸை அனுப்பினோம், ஆனால் அவர்கள் வரம்புமீறினர். தீயவர் களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனிப் பீராக.