குர்ஆன் 7:12 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர், “ நான் உனக்கு கட்டளையிட்டபோது சிரம்பணிவதிலிருந்து உன்னைத்தடுத்தது எது?” என்று கூறினார். அவன், “ நான் அவரை விடச் சிறப்பானவன், நீர் என்னை நெருப்பி லிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களி மண்ணிலிருந்து படைத்தீர்” என்று கூறினான்.
[7:11] நாமே உங்களைப் படைத்தோம், பின்பு உங்களு க்கு உருக்கொடுத்தோம், பின்னர் வானவர் களிடம், “ ஆதாமின் முன்பு சிரம் பணியுங்கள்” என்று கூறினோம். அவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர், இப்லீசை(சாத்தானை) தவிர; அவன் சிரம் பணிந்தவர்களில் இருக்கவில்லை.
[7:13] அவர், “ஆகையால், நீ கீழே இறங்கியாக வேண்டும், ஏனெனில் நீ இங்கு ஆணவம் கொள்வதற்கில்லை, வெளியேறு; நீ இழிவு படுத்தப்பட்டு விட்டாய்” என்று கூறினார்.