Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:20 — ஆன்மா தூய்மையடையும் இடம்

சாத்தான், அவர்களுடைய கண்களுக்குத் தெரியாமல் இருந்த அவர்களுடைய உடம்பு களை வெளிப்படுத்துவதற்காக, அவர்களிடம் கிசுகிசுத்தான். அவன் , “நீங்கள் வானவர் களாக ஆகிவிடுவதையும் மேலும் நிலைப் பேறான வாழ்வை அடைந்துவிடுவதையும் தடுப்பதற்காகவே தவிர உங்கள் இரட்சகர் இந்த மரத்தை விட்டும் உங்களைத் தடை செய்யவில்லை” என்று கூறினான்.

[7:19] “ஆதாமே, நீர் சுவனத்தில் உம்முடைய மனைவியுடன் வசித்திரும், மேலும் நீர் விரும்பிய வண்ணம் அதிலிருந்து உண்டு கொள்ளும், ஆனால் நீர் பாவத்தில் விழுந்து விடாதிருக்கும் பொருட்டு, இந்த ஒரு மரத்தை மட்டும் நெருங்காதீர்”.

[7:21] அவன் அவர்களிடத்தில் “நான் உங்களுக்கு நல்ல உபதேசம் தான் செய்கின்றேன்” என்று சத்தியம் செய்தான்.