குர்ஆன் 7:22 — ஆன்மா தூய்மையடையும் இடம்
இவ்வாறு அவன் பொய்களைக் கொண்டு அவர்களை ஏமாற்றினான். அவர்கள் மரத்தைச் சுவைத்த உடன் அவர்களின் உடம்புகள் அவர் களுக்குத் தெரிய ஆரம்பித்தன, மேலும், அவர் கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள முயற்சித்தனர். அவர்களுடைய இரட்சகர் அவர்களை அழைத்தார்; “நான் அம்மரத்திலிருந்து உங்களைத் தடுத்துக் கட்டளையிட்டும், மேலும் சாத்தான் உங்களுடைய தீவிரமான எதிரி என்றும் உங்களை எச்சரிக்கை செய்யவில்லையா?”
[7:21] அவன் அவர்களிடத்தில் “நான் உங்களுக்கு நல்ல உபதேசம் தான் செய்கின்றேன்” என்று சத்தியம் செய்தான்.
[7:23] அவர்கள் “எங்கள் இரட்சகரே, எங்கள் ஆன் மாக்களுக்கு நாங்கள் தீங்கு இழைத்துக் கொண்டோம், அன்றியும் நீர் எங்களை மன்னித்து, எங்கள் மீது கருணை புரியவில்லை யெனில்,நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்” என்று கூறினார்கள்.