Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:23 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர்கள் “எங்கள் இரட்சகரே, எங்கள் ஆன் மாக்களுக்கு நாங்கள் தீங்கு இழைத்துக் கொண்டோம், அன்றியும் நீர் எங்களை மன்னித்து, எங்கள் மீது கருணை புரியவில்லை யெனில்,நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்” என்று கூறினார்கள்.

[7:22] இவ்வாறு அவன் பொய்களைக் கொண்டு அவர்களை ஏமாற்றினான். அவர்கள் மரத்தைச் சுவைத்த உடன் அவர்களின் உடம்புகள் அவர் களுக்குத் தெரிய ஆரம்பித்தன, மேலும், அவர் கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள முயற்சித்தனர். அவர்களுடைய இரட்சகர் அவர்களை அழைத்தார்; “நான் அம்மரத்திலிருந்து உங்களைத் தடுத்துக் கட்டளையிட்டும், மேலும் சாத்தான் உங்களுடைய தீவிரமான எதிரி என்றும் உங்களை எச்சரிக்கை செய்யவில்லையா?”

[7:24] அவர், “ ஒருவருக்கொருவர் பகைவர்களாக கீழிறங்குங்கள், பூமியில் சிறிது காலம் உங்களுடைய வசிப்பிடமும், வாழ்வாதாரமும் இருக்கும்” என்று கூறினார்.