Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:35 — ஆன்மா தூய்மையடையும் இடம்

ஆதாமின் சந்ததியினரே, உங்களில் இருந்தே உங்களிடம் தூதர்கள் வந்து, மேலும் என் வெளிப்பாடுகளை உங்களிடம் ஓதிக்காட்டும் போது, எவர்கள் கவனத்தில் கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றார் களோ, அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

[7:34] ஒவ்வொரு சமூகத்திற்கும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக் காலம் உண்டு. அவர்களுடைய இக்காலத்தவணை முடிவிற்கு வந்துவிட்டால், அவர்கள் அதனை ஒரு மணி நேரமேனும் தாமதப்படுத்தவோ, அல்லது அதனை முற்படுத்தவோ இயலாது.

[7:36] நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து, மேலும் அவற்றைப் பின்பற்றுவதை விட்டு மிகவும் ஆணவம் கொள்பவர்களை பொறுத்த வரை, அவர்கள் நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.