குர்ஆன் 7:36 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து, மேலும் அவற்றைப் பின்பற்றுவதை விட்டு மிகவும் ஆணவம் கொள்பவர்களை பொறுத்த வரை, அவர்கள் நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[7:35] ஆதாமின் சந்ததியினரே, உங்களில் இருந்தே உங்களிடம் தூதர்கள் வந்து, மேலும் என் வெளிப்பாடுகளை உங்களிடம் ஓதிக்காட்டும் போது, எவர்கள் கவனத்தில் கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றார் களோ, அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[7:37] கடவுள்-ஐப் பற்றி பொய்களைக் கண்டுபிடிப் பவர்கள் அல்லது அவருடைய வெளிப்பாடு களை ஏற்கமறுப்பவர்களை விடத் தீயவர்கள் வேறுயார்? இவர்கள் வேதத்திற்கு இணங்க அவர்களின் பங்கைப் பெறுவார்கள், பின்னர் அவர்களது வாழ்வுகளை முடிக்க நம்முடைய தூதர்கள் வரும்பொழுது, அவர்கள் “கடவுள்-உடன் நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கூறுவார்கள். அவர்கள், “அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள்,” என்று கூறுவார்கள். அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருந்தனர் என்று அவர்களுக்கெதிராகவே அவர்கள் சாட்சியம் அளிப்பார்கள்.