குர்ஆன் 7:37 — ஆன்மா தூய்மையடையும் இடம்
கடவுள்-ஐப் பற்றி பொய்களைக் கண்டுபிடிப் பவர்கள் அல்லது அவருடைய வெளிப்பாடு களை ஏற்கமறுப்பவர்களை விடத் தீயவர்கள் வேறுயார்? இவர்கள் வேதத்திற்கு இணங்க அவர்களின் பங்கைப் பெறுவார்கள், பின்னர் அவர்களது வாழ்வுகளை முடிக்க நம்முடைய தூதர்கள் வரும்பொழுது, அவர்கள் “கடவுள்-உடன் நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கூறுவார்கள். அவர்கள், “அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள்,” என்று கூறுவார்கள். அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருந்தனர் என்று அவர்களுக்கெதிராகவே அவர்கள் சாட்சியம் அளிப்பார்கள்.
[7:36] நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து, மேலும் அவற்றைப் பின்பற்றுவதை விட்டு மிகவும் ஆணவம் கொள்பவர்களை பொறுத்த வரை, அவர்கள் நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள், அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[7:38] அவர், “ஜின்கள் மற்றும் மனிதர்களின் முந்தைய சமூகத்தினர்களோடு நரகிற்குள் நுழையுங்கள்” என்று கூறுவார். ஒவ்வொரு முறையும் ஒரு கூட்டம் நுழையும் போது, அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் கூட்டத்தைச் சபிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதனுள்வந்தவுடன், கடைசியில் வந்தவர்கள் முன்னர் வந்திருப்பவர்களைப் பற்றி , “ எங்கள் இரட்சகரே, இவர்கள் தான் எங்களை வழிதவறச் செய்தவர்கள், அவர்களுக்கு நரகின் வேதனையை இருமடங்காக்கு வீராக,” என்று கூறுவார்கள். அவர், “ஒவ்வொருவரும் இருமடங்கையே பெறுகீன்றீர்கள், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறுவார்.