குர்ஆன் 7:38 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர், “ஜின்கள் மற்றும் மனிதர்களின் முந்தைய சமூகத்தினர்களோடு நரகிற்குள் நுழையுங்கள்” என்று கூறுவார். ஒவ்வொரு முறையும் ஒரு கூட்டம் நுழையும் போது, அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் கூட்டத்தைச் சபிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதனுள்வந்தவுடன், கடைசியில் வந்தவர்கள் முன்னர் வந்திருப்பவர்களைப் பற்றி , “ எங்கள் இரட்சகரே, இவர்கள் தான் எங்களை வழிதவறச் செய்தவர்கள், அவர்களுக்கு நரகின் வேதனையை இருமடங்காக்கு வீராக,” என்று கூறுவார்கள். அவர், “ஒவ்வொருவரும் இருமடங்கையே பெறுகீன்றீர்கள், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறுவார்.
[7:37] கடவுள்-ஐப் பற்றி பொய்களைக் கண்டுபிடிப் பவர்கள் அல்லது அவருடைய வெளிப்பாடு களை ஏற்கமறுப்பவர்களை விடத் தீயவர்கள் வேறுயார்? இவர்கள் வேதத்திற்கு இணங்க அவர்களின் பங்கைப் பெறுவார்கள், பின்னர் அவர்களது வாழ்வுகளை முடிக்க நம்முடைய தூதர்கள் வரும்பொழுது, அவர்கள் “கடவுள்-உடன் நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கூறுவார்கள். அவர்கள், “அவர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள்,” என்று கூறுவார்கள். அவர்கள் நம்ப மறுப்பவர்களாக இருந்தனர் என்று அவர்களுக்கெதிராகவே அவர்கள் சாட்சியம் அளிப்பார்கள்.
[7:39] முன்னோர்களின் கூட்டம், பின்வந்த கூட்டத் திடம் , “ எங்களுக்கும் மேலாக ஒரு அனுகூலத் தை நீங்கள் பெற்றிருந்ததால், உங்களுடைய சொந்த பாவங்களுக்காகத் தண்டனையை சுவையுங்கள்” என்று கூறும்.