குர்ஆன் 7:39 — ஆன்மா தூய்மையடையும் இடம்
முன்னோர்களின் கூட்டம், பின்வந்த கூட்டத் திடம் , “ எங்களுக்கும் மேலாக ஒரு அனுகூலத் தை நீங்கள் பெற்றிருந்ததால், உங்களுடைய சொந்த பாவங்களுக்காகத் தண்டனையை சுவையுங்கள்” என்று கூறும்.
[7:38] அவர், “ஜின்கள் மற்றும் மனிதர்களின் முந்தைய சமூகத்தினர்களோடு நரகிற்குள் நுழையுங்கள்” என்று கூறுவார். ஒவ்வொரு முறையும் ஒரு கூட்டம் நுழையும் போது, அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் கூட்டத்தைச் சபிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதனுள்வந்தவுடன், கடைசியில் வந்தவர்கள் முன்னர் வந்திருப்பவர்களைப் பற்றி , “ எங்கள் இரட்சகரே, இவர்கள் தான் எங்களை வழிதவறச் செய்தவர்கள், அவர்களுக்கு நரகின் வேதனையை இருமடங்காக்கு வீராக,” என்று கூறுவார்கள். அவர், “ஒவ்வொருவரும் இருமடங்கையே பெறுகீன்றீர்கள், ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” என்று கூறுவார்.
[7:40] நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து மேலும் அவற்றை ஆதரிப்பதை விட்டும் மிக ஆணவம் கொண்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப் படமாட்டாது, அன்றியும் ஊசியின் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவனத்தினுள் நுழைய முடியாது. நாம் குற்றவாளிகளை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.