Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:40 — ஆன்மா தூய்மையடையும் இடம்

நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து மேலும் அவற்றை ஆதரிப்பதை விட்டும் மிக ஆணவம் கொண்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப் படமாட்டாது, அன்றியும் ஊசியின் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவனத்தினுள் நுழைய முடியாது. நாம் குற்றவாளிகளை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.

[7:39] முன்னோர்களின் கூட்டம், பின்வந்த கூட்டத் திடம் , “ எங்களுக்கும் மேலாக ஒரு அனுகூலத் தை நீங்கள் பெற்றிருந்ததால், உங்களுடைய சொந்த பாவங்களுக்காகத் தண்டனையை சுவையுங்கள்” என்று கூறும்.

[7:41] அவர்கள் நரகத்தை ஒரு தங்குமிடமாக்கிக் கொண்டார்கள்; தங்களுக்கு மேலாக தடுப்புச் சுவர்களைக் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். நாம் வரம்புமீறியவர்களை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.