குர்ஆன் 7:41 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்கள் நரகத்தை ஒரு தங்குமிடமாக்கிக் கொண்டார்கள்; தங்களுக்கு மேலாக தடுப்புச் சுவர்களைக் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். நாம் வரம்புமீறியவர்களை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.
[7:40] நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து மேலும் அவற்றை ஆதரிப்பதை விட்டும் மிக ஆணவம் கொண்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப் படமாட்டாது, அன்றியும் ஊசியின் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவனத்தினுள் நுழைய முடியாது. நாம் குற்றவாளிகளை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.
[7:42] நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை -நாம் எந்த ஆன்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சுமத்துவதில்லை-இத்தகையவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.