குர்ஆன் 7:42 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை -நாம் எந்த ஆன்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சுமத்துவதில்லை-இத்தகையவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[7:41] அவர்கள் நரகத்தை ஒரு தங்குமிடமாக்கிக் கொண்டார்கள்; தங்களுக்கு மேலாக தடுப்புச் சுவர்களைக் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். நாம் வரம்புமீறியவர்களை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.
[7:43] நாம் அவர்களின் உள்ளங்களில் இருந்து எல்லா பொறாமைகளையும் நீக்கிவிடுவோம். அவர் களுக்குக் கீழே ஆறுகள் ஓடும், மேலும் அவர்கள், “ நம்மை நேர்வழி நடத்தியதற்காகக் கடவுள்-க்கே புகழ் அனைத்தும். கடவுள் நம்மை வழி நடத்தியிருக்காவிடில், நாம் வழிகாட்டலை அடைந்திருக்கும் சாத்தியமே யில்லை. நம் இரட்சகரின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்” என்று கூறுவார்கள். அவர்களிடம்: “இதுவே உங்களுடைய சுவனம். உங்கள் காரியங்களின் பிரதிபலனாக, இதற்கு நீங்கள் வாரிசாகி விட்டீர்கள்” என்று கூறப்படும்.