குர்ஆன் 7:43 — ஆன்மா தூய்மையடையும் இடம்
நாம் அவர்களின் உள்ளங்களில் இருந்து எல்லா பொறாமைகளையும் நீக்கிவிடுவோம். அவர் களுக்குக் கீழே ஆறுகள் ஓடும், மேலும் அவர்கள், “ நம்மை நேர்வழி நடத்தியதற்காகக் கடவுள்-க்கே புகழ் அனைத்தும். கடவுள் நம்மை வழி நடத்தியிருக்காவிடில், நாம் வழிகாட்டலை அடைந்திருக்கும் சாத்தியமே யில்லை. நம் இரட்சகரின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்” என்று கூறுவார்கள். அவர்களிடம்: “இதுவே உங்களுடைய சுவனம். உங்கள் காரியங்களின் பிரதிபலனாக, இதற்கு நீங்கள் வாரிசாகி விட்டீர்கள்” என்று கூறப்படும்.
[7:42] நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை -நாம் எந்த ஆன்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சுமத்துவதில்லை-இத்தகையவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[7:44] சுவனவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள்: “எங்கள் இரட்சகரின் வாக்குறுதி சத்தியம் என்பதை நாங்கள் கண்டு கொண்டோம், உங்கள் இரட்சகரின் வாக்குறுதி சத்தியம் தான் என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்களா?” அவர்கள், “ஆம்” என்று கூறுவார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு அறிவிப்பாளர் அறிவிப்பார்: கடவுள்-ன் தண்டித்தலானது வரம்பு மீறியவர்கள் மேல் விழுந்துவிட்டது;