குர்ஆன் 7:47 — ஆன்மா தூய்மையடையும் இடம்
وَإِذا صُرِفَت أَبصٰرُهُم تِلقاءَ أَصحٰبِ النّارِ قالوا رَبَّنا لا تَجعَلنا مَعَ القَومِ الظّٰلِمينَ
நரகவாசிகளை நோக்கி தங்கள் கண்களை அவர்கள் திருப்பும் போது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, இந்தத் தீய மக்களோடு எங்களைப் போட்டுவிடாதீர்” என்று கூறுவார்கள்.
[7:46] ஒரு தடுப்பு அவர்களைப்பிரித்து இருக்கும், அதே சமயம் ஆன்மா தூய்மையடையும் இடமானது* ஒவ்வொரு தரப்பையும் அவர்கள் தோற்றங்களைக் கொண்டே அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய மக்களால் ஆக்கிர மிக்கப்பட்டிருக்கும். அவர்கள் சுவனவாசிகளை, “உங்கள் மீது அமைதி நிலவட்டும்” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள் நினைத்துள்ளது உண்மையாகிவிடாதா என்ற எண்ணத்திற் கிடையில் (சுவனத்தில்) நுழைந்து விடவில்லை.
[7:48] அவர்களின் தோற்றங்களை வைத்து அடையாளம் காணப்பட்ட மக்களை அழைத்து ஆன்மா தூய்மையடையும் இடத்தில் வசிப்ப வர்கள் கூறுவார்கள். “உங்களின் பெரும் எண்ணிக்கைகளோ அன்றி உங்கள் ஆணவமோ உங்களுக்கு எந்த வழியிலும் பலனளிக்கவில்லை.