Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:48 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர்களின் தோற்றங்களை வைத்து அடையாளம் காணப்பட்ட மக்களை அழைத்து ஆன்மா தூய்மையடையும் இடத்தில் வசிப்ப வர்கள் கூறுவார்கள். “உங்களின் பெரும் எண்ணிக்கைகளோ அன்றி உங்கள் ஆணவமோ உங்களுக்கு எந்த வழியிலும் பலனளிக்கவில்லை.

[7:47] நரகவாசிகளை நோக்கி தங்கள் கண்களை அவர்கள் திருப்பும் போது, அவர்கள், “எங்கள் இரட்சகரே, இந்தத் தீய மக்களோடு எங்களைப் போட்டுவிடாதீர்” என்று கூறுவார்கள்.

[7:49] “அவர்களைக் கடவுள் ஒரு போதும் கருணை யால் தொடமாட்டார் என்று நீங்கள் சத்தியம் செய்த மக்கள் இவர்கள் தானா?” “சுவனத்தில் நுழையுங்கள்; நீங்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றியும் நீங்கள் கவலையுறவும் மாட்டீர்கள்,” (என்று ஆன்மா தூய்மையடையும் இடத்தில் இருக்கும் மக்களிடம் பின்னர் கூறப்படும்).