குர்ஆன் 7:50 — ஆன்மா தூய்மையடையும் இடம்
சுவனவாசிகளை நோக்கி நரகவாசிகள்: “உங்கள் தண்ணீரிலிருந்து கொஞ்சம் அல்லது கடவுள் உங்களுக்கு அளித்த வாழ்வாதாரங்களில் இருந்து கொஞ்சம் எங்களை நோக்கித் திருப்பி விடுங்கள்” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள், “அவற்றை கடவுள் நம்ப மறுப்பவர் களுக்கு தடை செய்துவிட்டார்” என்று கூறுவார்கள்.
[7:49] “அவர்களைக் கடவுள் ஒரு போதும் கருணை யால் தொடமாட்டார் என்று நீங்கள் சத்தியம் செய்த மக்கள் இவர்கள் தானா?” “சுவனத்தில் நுழையுங்கள்; நீங்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றியும் நீங்கள் கவலையுறவும் மாட்டீர்கள்,” (என்று ஆன்மா தூய்மையடையும் இடத்தில் இருக்கும் மக்களிடம் பின்னர் கூறப்படும்).
[7:51] தங்கள் மார்க்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாதவர்கள், மேலும் இந்த உலக வாழ்க்கையோடு முழுமையாக மூழ்கி விட்டவர் கள், இவர்களை நாம் அந்தநாளில், அந்த நாளை மறந்துவிட்ட காரணத்திற்காகவும், மேலும் அவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளை அலட்சியம் செய்த காரணத்திற்காகவும் மறந்து விடுவோம்.