குர்ஆன் 7:63 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“நீங்கள் கருணையை அடையும் பொருட்டு உங்களை எச்சரிக்கவும் மேலும் உங்களை நன்னெறியின் பால் வழி நடத்தவும், உங்களைப் போன்ற ஒரு மனிதரின் மூலம், உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல் வருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளதா?”
[7:62] “என் இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு அறிவுரை கூறுகின்றேன், மேலும் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்- இடமிருந்து நான் அறிகின்றேன்.
[7:64] அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் மூடப்பட்ட படகில் காப்பாற்றினோம், மேலும் நம் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர்களை மூழ்கடித்தோம்; அவர்கள் குருடர்களாக இருந்தனர்.