குர்ஆன் 7:78 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அதன் விளைவாக, அதிர்வு அவர்களை அழித்தது, அவர்களுடைய வீடுகளில் அவர்களை இறந்தவர் களாக விட்டுவிட்டது.
[7:77] அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொலை செய்துவிட்டனர், அவர் களுடைய இரட்சகரின் கட்டளைக்கெதிராகக் கலகம் செய்தனர், மேலும் “ஸாலிஹே, நீர் உண்மையில் ஒரு தூதராக இருந்தால், எந்த அழிவைக் கொண்டு நீர் எங்களை அச்சுறுத்து கின்றீரோ அதனைக் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.
[7:79] அவர், “என் சமூகத்தாரே, நான் என் இரட்சகரின் செய்தியை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன், மேலும் உங்களுக்கு உபதேசமும் செய்தேன், ஆனால் உபதேசிப்பவர் எவரையும் நீங்கள் விரும்ப வில்லை,” என்று கூறியவராக, அவர்களிடம் இருந்து திரும்பிச் சென்று விட்டார்.