குர்ஆன் 7:84 — ஆன்மா தூய்மையடையும் இடம்
ஒரு குறிப்பிட்ட பொழிவைக் கொண்டு நாம் அவர்கள் மீது பொழிந்தோம்; குற்றவாளிகளுக் குரிய விளைவுகளை கவனியுங்கள்.
[7:83] அதன் விளைவாக, நாம் அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றினோம், ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அவள் அழிந்து போனவர்களுடன் இருந்தாள்.
[7:85] மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு சான்று வந்துள்ளது. நீங்கள் வணிகம் செய்யும் போது முழு எடையையும் முழு அளவையும் கொடுக்கவேண்டும். மனிதர்களின் உரிமைகளை அவர்களிடமிருந்து ஏமாற்றி பறித்து விடாதீர்கள். பூமி சீர்செய்யப்பட்ட பின்னர் அதனைச் சீர்குலைக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர் களாக இருந்தால், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.