Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:85 — ஆன்மா தூய்மையடையும் இடம்

மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு சான்று வந்துள்ளது. நீங்கள் வணிகம் செய்யும் போது முழு எடையையும் முழு அளவையும் கொடுக்கவேண்டும். மனிதர்களின் உரிமைகளை அவர்களிடமிருந்து ஏமாற்றி பறித்து விடாதீர்கள். பூமி சீர்செய்யப்பட்ட பின்னர் அதனைச் சீர்குலைக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர் களாக இருந்தால், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

[7:84] ஒரு குறிப்பிட்ட பொழிவைக் கொண்டு நாம் அவர்கள் மீது பொழிந்தோம்; குற்றவாளிகளுக் குரிய விளைவுகளை கவனியுங்கள்.

[7:86] “நம்பிக்கைக் கொண்டோரைக் கடவுள்-ன் பாதையில் இருந்து விரட்டியடிக்க நாடி ஒவ்வொரு பாதையையும் தடுத்துக் கொள்வதில் இருந்தும் விலகிக் கொள்ளுங்கள், மேலும் அதனைக் கோணலாக்காதீர்கள். நீங்கள் சொற்பமானவர் களாக இருந்தீர்கள் என்பதையும் மேலும் அவர் உங்களை எண்ணிக்கையில் பெருக்கியதையும் நினைவில் கொள்ளுங்கள். தீயவர்களுக்குரிய விளைவுகளை நீங்கள் நினைவு கூருங்கள்.