குர்ஆன் 7:86 — ஆன்மா தூய்மையடையும் இடம்
وَلا تَقعُدوا بِكُلِّ صِرٰطٍ توعِدونَ وَتَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ مَن ءامَنَ بِهِ وَتَبغونَها عِوَجًا ۚ وَاذكُروا إِذ كُنتُم قَليلًا فَكَثَّرَكُم ۖ وَانظُروا كَيفَ كانَ عٰقِبَةُ المُفسِدينَ
“நம்பிக்கைக் கொண்டோரைக் கடவுள்-ன் பாதையில் இருந்து விரட்டியடிக்க நாடி ஒவ்வொரு பாதையையும் தடுத்துக் கொள்வதில் இருந்தும் விலகிக் கொள்ளுங்கள், மேலும் அதனைக் கோணலாக்காதீர்கள். நீங்கள் சொற்பமானவர் களாக இருந்தீர்கள் என்பதையும் மேலும் அவர் உங்களை எண்ணிக்கையில் பெருக்கியதையும் நினைவில் கொள்ளுங்கள். தீயவர்களுக்குரிய விளைவுகளை நீங்கள் நினைவு கூருங்கள்.
[7:85] மித்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு சான்று வந்துள்ளது. நீங்கள் வணிகம் செய்யும் போது முழு எடையையும் முழு அளவையும் கொடுக்கவேண்டும். மனிதர்களின் உரிமைகளை அவர்களிடமிருந்து ஏமாற்றி பறித்து விடாதீர்கள். பூமி சீர்செய்யப்பட்ட பின்னர் அதனைச் சீர்குலைக்காதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர் களாக இருந்தால், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
[7:87] “இப்போது உங்களில் சிலர் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதில் நம்பிக்கை கொண்டீர்கள், சிலர் நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டீர்கள், நமக்கிடையில் கடவுள் தன் தீர்ப்பை வழங்கும் வரை காத்திருங்கள்; அவரே மிகச் சிறந்த நீதிபதி.”