Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:87 — ஆன்மா தூய்மையடையும் இடம்

“இப்போது உங்களில் சிலர் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதில் நம்பிக்கை கொண்டீர்கள், சிலர் நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டீர்கள், நமக்கிடையில் கடவுள் தன் தீர்ப்பை வழங்கும் வரை காத்திருங்கள்; அவரே மிகச் சிறந்த நீதிபதி.”

[7:86] “நம்பிக்கைக் கொண்டோரைக் கடவுள்-ன் பாதையில் இருந்து விரட்டியடிக்க நாடி ஒவ்வொரு பாதையையும் தடுத்துக் கொள்வதில் இருந்தும் விலகிக் கொள்ளுங்கள், மேலும் அதனைக் கோணலாக்காதீர்கள். நீங்கள் சொற்பமானவர் களாக இருந்தீர்கள் என்பதையும் மேலும் அவர் உங்களை எண்ணிக்கையில் பெருக்கியதையும் நினைவில் கொள்ளுங்கள். தீயவர்களுக்குரிய விளைவுகளை நீங்கள் நினைவு கூருங்கள்.

[7:88] அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் மிக்க தலைவர்கள், “ஷுஐபே, நீர் எங்கள் மார்க்கத் திற்குத் திரும்பாவிட்டால், எங்களுடைய நகரத்தி லிருந்து உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண் டோரையும் நாங்கள் வெளியேற்றி விடுவோம்,” என்று கூறினார்கள். அவர் கூறினார், “ நீங்கள் எங்களை நிர்ப்பந்திக்கப் போகின்றீர்களா?