குர்ஆன் 7:88 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவருடைய சமூகத்தாரில் இருந்த ஆணவம் மிக்க தலைவர்கள், “ஷுஐபே, நீர் எங்கள் மார்க்கத் திற்குத் திரும்பாவிட்டால், எங்களுடைய நகரத்தி லிருந்து உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண் டோரையும் நாங்கள் வெளியேற்றி விடுவோம்,” என்று கூறினார்கள். அவர் கூறினார், “ நீங்கள் எங்களை நிர்ப்பந்திக்கப் போகின்றீர்களா?
[7:87] “இப்போது உங்களில் சிலர் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதில் நம்பிக்கை கொண்டீர்கள், சிலர் நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டீர்கள், நமக்கிடையில் கடவுள் தன் தீர்ப்பை வழங்கும் வரை காத்திருங்கள்; அவரே மிகச் சிறந்த நீதிபதி.”
[7:89] “கடவுள் உங்கள் மார்க்கத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிவிட்ட பின்னர் நாங்கள் மீண்டும் அதற்குத் திரும்பி விடுவோமாயின் நாங்கள் கடவுள்-க்கு எதிராக நிந்தனையைச் செய்தவர்கள் ஆவோம். எங்களுடைய இரட்சகராகிய கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக எவ்வாறு நாங்கள் அதற்கு மீண்டும் திரும்ப இயலும்? எங்கள் இரட்சகரின் அறிவு எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றது. நாங்கள் எங்களுடைய உறுதியான நம்பிக்கையை கடவுள்-ன் மீது வைத்திருக்கின்றோம். எங்கள் இரட்சகரே, எங்கள் சமூகத்தாரின் மீது எங்களுக்கு ஒரு தீர்மானமான வெற்றியை வழங்குவீராக, நீரே மிகச் சிறந்த ஆதரவாளர்”.