குர்ஆன் 7:99 — ஆன்மா தூய்மையடையும் இடம்
கடவுள்-ன் திட்டங்களை அவர்கள் சாதாரண மாகஎடுத்துக்கொண்டுவிட்டனரா? நஷ்டவாளிகளைத் தவிர வேறெவரும் கடவுள் -ன் திட்டங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
[7:98] இன்றைய சமூகத்தில் உள்ள மக்கள் நம்முடைய தண்டனை அவர்களிடம் பகலில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது வந்துவிடாது என்று உத்திரவாதம் கொண்டி ருக்கின்றனரா?
[7:100] முந்திய தலைமுறையினர்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசுகளாக ஆனவர்களுக்கு, நாம் நாடினால், அவர்களுடைய பாவங்களுக்காக நாம் அவர்களைத் தண்டித்து விட இயலும் என்றும், மேலும் அவர்கள் செவிடர்களாக மாறிப்போகும்படி, அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விட இயலும் என்றும் ஒருபோதும் தோன்றாதா?