குர்ஆன் 72:24 — ஜின்கள்
அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருப் பவற்றை அவர்கள் கண்டவுடன், மெய்யாகவே பலம் குன்றியவர்கள், மேலும் எண்ணிக்கையில் குறைவானவர்கள் யார் என அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[72:23] “நான் கடவுள்-ன் பிரகடனங்களையும் தூதுச் செய்திகளையும் அறிவிக்கின்றேன்”. கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் நரகத்தின் நெருப்பிற்கு உள்ளா கின்றனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[72:25] “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது விரை வில் நிகழ்ந்தேறுமா, அல்லது என் இரட்சகர் அதனை சிறிதொரு காலம் தாமதப்படுத்து வாரா என்பதை நான் அறியமாட்டேன்” என்று கூறுவீராக.