குர்ஆன் 76:1 — மனிதர்
மனிதன் குறிப்பிடப்படுவதற்கு என எந்த ஒன்றுமாக இல்லாதிருந்த ஒரு காலம் இருந்தது என்பது ஓர் உண்மை இல்லையா?
[76:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[76:2] அவனைச் சோதனை செய்யும் பொருட்டு, பெற்றோர்கள் இருவரின், ஒரு திரவக் கலவை யிலிருந்து மனிதனை நாம் படைத்தோம். இவ்விதமாக, அவனை நாம் செவியேற்கக் கூடிய ஒருவனாகவும் மேலும் பார்க்கக் கூடிய ஒருவனாகவும் ஆக்கினோம்.