குர்ஆன் 76:3 — மனிதர்
இரண்டு பாதைகளை அவனுக்கு நாம் காட்டி னோம், பின்னர், அவன் நன்றியுடைய வனாகவோ, அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்கின்றான்.
[76:2] அவனைச் சோதனை செய்யும் பொருட்டு, பெற்றோர்கள் இருவரின், ஒரு திரவக் கலவை யிலிருந்து மனிதனை நாம் படைத்தோம். இவ்விதமாக, அவனை நாம் செவியேற்கக் கூடிய ஒருவனாகவும் மேலும் பார்க்கக் கூடிய ஒருவனாகவும் ஆக்கினோம்.
[76:4] நம்ப மறுப்பவர்களுக்காகச் சங்கிலிகளையும், விலங்குகளையும், மேலும் கொழுந்து விட்டெரி கின்ற ஒரு நரகத்தையும் நாம் தயார் செய்திருக் கின்றோம்.