குர்ஆன் 8:17 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
அவர்களைக் கொன்றது நீங்கள் அல்ல; கடவுள் தான் அவர்களைக் கொன்றார். நீங்கள் எறிந்த போது, எறிந்தது நீங்கள் அல்ல; கடவுள்-தான் எறிந்தார். ஆயினும், இவ்விதமாக அவர், நம்பிக்கையாளர்கள் ஏராளமான வரவுகளைச் சம்பாதிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகின் றார். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[8:16] எவரேனும் அந்நாளில் ஒரு யுத்தத் திட்டத்தை செயலாக்குவதற்கோ, அல்லது தன் பிரிவினருடன் சேர்ந்து கொள்வதற்கோ தவிர புறங்காட்டுவாரேயானால், அவர் கடவுள்-ன் கடுங்கோபத்திற்குள்ளாகிவிட்டார், மேலும் அவருடைய தங்குமிடம் நரகமாகும்; எத்தகைய ஒரு துன்பகரமான விதி!
[8:18] கூடுதலாக, கடவுள் இவ்வாறு நம்ப மறுப்பவர் களின் சூழ்ச்சிகளைப் பயனற்றதாக்கு கின்றார்.