குர்ஆன் 8:27 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَخونُوا اللَّهَ وَالرَّسولَ وَتَخونوا أَمٰنٰتِكُم وَأَنتُم تَعلَمونَ
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இப்போது அறிந்து கொண்டிருப்பதால், கடவுள்-ஐயும் தூதரையும் வஞ்சித்து விடாதீர்கள், மேலும் உங்களிடம் பொறுப்பை ஒப்படைப்போரை வஞ்சித்து விடாதீர்கள்.
[8:26] நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கும் பொருட்டு, நீங்கள் சிலராகவும் மேலும் அடக்கு முறை செய்யப்பட்டவர்களாகவும், மக்கள் உங்களை பிடுங்கிச் சென்றுவிடுவார்கள் என்று அஞ்சியவர்களாகவும் இருந்ததையும் மேலும் அவர் உங்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதையும், அவருடைய வெற்றியைக் கொண்டு ஆதரவளித்ததையும், மேலும் நல்ல வாழ்வாதாரங்களைக் கொண்டு வழங்கியதையும் நினைவில் கொள்ளுங்கள்.
[8:28] உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் ஒரு சோதனை என்பதையும், மேலும் ஒரு மாபெரும் வெகுமதியினை கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.