குர்ஆன் 8:29 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்- இடம் பயபக்தியோடிருந்தால், அவர் உங்களுக்குத் தெளிவு படுத்துவார், உங்களுடைய பாவங் களைத் தள்ளுபடி செய்வார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் எல்லையற்ற அருளைத் தன் வசம் வைத்திருக்கின்றார்.
[8:28] உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் ஒரு சோதனை என்பதையும், மேலும் ஒரு மாபெரும் வெகுமதியினை கடவுள் தன்வசம் வைத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
[8:30] நம்ப மறுப்பவர்கள் உம்மைச் செயலிழக்கச் செய்வதற்கு, அல்லது உம்மைக் கொல்வதற்கு, அல்லது உம்மை நாட்டை விட்டு வெளியேற்று வதற்கு சதியும், சூழ்ச்சியும் செய்கின்றார்கள். ஆயினும், அவர்கள் சதியும் சூழ்ச்சியும் செய்த போதிலும், கடவுள்-ம் அவ்வாறே செய் கின்றார். கடவுள் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவர்.