குர்ஆன் 8:30 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நம்ப மறுப்பவர்கள் உம்மைச் செயலிழக்கச் செய்வதற்கு, அல்லது உம்மைக் கொல்வதற்கு, அல்லது உம்மை நாட்டை விட்டு வெளியேற்று வதற்கு சதியும், சூழ்ச்சியும் செய்கின்றார்கள். ஆயினும், அவர்கள் சதியும் சூழ்ச்சியும் செய்த போதிலும், கடவுள்-ம் அவ்வாறே செய் கின்றார். கடவுள் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவர்.
[8:29] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்- இடம் பயபக்தியோடிருந்தால், அவர் உங்களுக்குத் தெளிவு படுத்துவார், உங்களுடைய பாவங் களைத் தள்ளுபடி செய்வார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் எல்லையற்ற அருளைத் தன் வசம் வைத்திருக்கின்றார்.
[8:31] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடத்தில் ஓதிக்காட்டப்படும்போது, அவர்கள், “நாங்கள் கேட்டுக் கொண்டோம். நாங்கள் விரும்பி யிருந்தால், நாங்களும் இதே விஷயங்களைக் கூறியிருக்க இயலும். இவை கடந்த காலக் கட்டுக் கதைகளே தவிர அதிகமாக எதுவு மில்லை!” என்று கூறுகின்றார்கள்.