குர்ஆன் 8:31 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடத்தில் ஓதிக்காட்டப்படும்போது, அவர்கள், “நாங்கள் கேட்டுக் கொண்டோம். நாங்கள் விரும்பி யிருந்தால், நாங்களும் இதே விஷயங்களைக் கூறியிருக்க இயலும். இவை கடந்த காலக் கட்டுக் கதைகளே தவிர அதிகமாக எதுவு மில்லை!” என்று கூறுகின்றார்கள்.
[8:30] நம்ப மறுப்பவர்கள் உம்மைச் செயலிழக்கச் செய்வதற்கு, அல்லது உம்மைக் கொல்வதற்கு, அல்லது உம்மை நாட்டை விட்டு வெளியேற்று வதற்கு சதியும், சூழ்ச்சியும் செய்கின்றார்கள். ஆயினும், அவர்கள் சதியும் சூழ்ச்சியும் செய்த போதிலும், கடவுள்-ம் அவ்வாறே செய் கின்றார். கடவுள் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவர்.
[8:32] அவர்கள் மேலும், “எங்கள் தெய்வமே, இது உண்மையில் உம்மிடம் இருந்து வந்த சத்தியம் தான் என்றால், பின்னர் எங்கள் மீது விண்ணி லிருந்து பாறைகளைப் பொழிவீராக, அல்லது எங்கள் மேல் ஒரு வலி மிகுந்த தண்டனையை ஊற்றுவீராக என்றும் கூறினார்கள்.