Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:34 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

புனித மஸ்ஜிதின் பொறுப்பாளர்களாக அவர்கள் இல்லாத போதும், அதை விட்டும் மற்றவர்களைத் தடுத்துக் கொண்டிருப் பதனால், கடவுள்-ன் தண்டனைக்கு அவர்கள் தகுதியானவர்களாகிவிட்டார்கள் அல்லவா? நன்னெறியாளர்களே அதன் உண்மையான பொறுப்பாளர்கள் ஆவார்கள், ஆனால் அவர் களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.

[8:33] ஆயினும், அவர்கள் மத்தியில் நீர் இருக்கும் போது கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை; அவர்கள் மன்னிப்புத் தேடிக் கொண் டிருக்கும் நிலையில் கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை.

[8:35] (கஃபா) ஆலயத்தில் அவர்களின் தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) எல்லாம் பரிகாசம் செய்வதும், மேலும் மக்களை (நெருக்கடி செய்து வெளியில்) விரட்டும் ஒரு வழிமுறையாகவும் இருந்ததேயன்றி அதிகமாக எதுவுமில்லை. ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.