குர்ஆன் 8:35 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
(கஃபா) ஆலயத்தில் அவர்களின் தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) எல்லாம் பரிகாசம் செய்வதும், மேலும் மக்களை (நெருக்கடி செய்து வெளியில்) விரட்டும் ஒரு வழிமுறையாகவும் இருந்ததேயன்றி அதிகமாக எதுவுமில்லை. ஆகையால், உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.
[8:34] புனித மஸ்ஜிதின் பொறுப்பாளர்களாக அவர்கள் இல்லாத போதும், அதை விட்டும் மற்றவர்களைத் தடுத்துக் கொண்டிருப் பதனால், கடவுள்-ன் தண்டனைக்கு அவர்கள் தகுதியானவர்களாகிவிட்டார்கள் அல்லவா? நன்னெறியாளர்களே அதன் உண்மையான பொறுப்பாளர்கள் ஆவார்கள், ஆனால் அவர் களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
[8:36] நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய பணத்தை கடவுள்-ன் பாதையிலிருந்து மற்றவர்களை விரட்டுவதற்காகச் செலவிடுகின்றனர். அவர்கள் அதனைச் செலவிடுவார்கள், பின்னர் அதுவே அவர்களுக்குத் துக்கமும், குற்றவுணர்வால் எற்படும் வருத்தமும் ஆக மாறிவிடும். இறுதியாக, அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மேலும் நம்ப மறுப்பவர்கள் அனைவரும் நரகத்தில் ஒன்று கூட்டப்படுவார்கள்.