Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:43 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

(முஹம்மதே) உம்முடைய கனவில் அவர்களை, எண்ணிக்கையில் குறைவாகத் தெரியும்படி கடவுள் செய்தார். அவர்களை அதிக எண்ணிக் கையில் தெரியும் படி அவர் செய்திருந்தால், நீங்கள் தோல்வியடைந்திருப்பீர்கள், மேலும் உங்களுக் குள் நீங்கள் தர்க்கம் புரிந்து கொண்டிருந் திருப்பீர்கள். ஆனால் கடவுள் இந்நிலைமையைப் பாதுகாத்தார். அவர் ஆழ்மனதின் எண்ணங்களையும் அறிகின்றவர்.

[8:42] பள்ளத்தாக்கின் இந்தப் புறத்தில் நீங்கள் இருந்த அதே சமயம், மற்றொரு புறத்தில் அவர்கள் இருந்ததை நினைவு கூர்வீராக, அப்போது அவர்களுடைய வாகனக் கூட்டம் தாழ்வான தரைப்பகுதியை நோக்கி நகர வேண்டியிருந்தது. இந்த வழியில் நீங்கள் அதனைத் திட்டமிட்டிருந் தீர்களானால், உங்களால் அதனைச் செய்திருக்க முடியாது. ஆனால் அழிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டவர்கள், ஒரு வெளிப்படையான காரணத்திற்காக அழிக்கப்படுவதற்கும், காப் பாற்றப்பட வேண்டும் என விதிக்கப்பட்டவர்கள், ஒரு வெளிப்படையான காரணத்திற்காக காப் பாற்றப்படுவதற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயத்தைக் கடவுள் நிகழ்த்த இருந்தார். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[8:44] மேலும் அந்நேரம் வந்து அவர்களை நீங்கள் சந்தித்த போது, உங்களுடைய கண்களுக்கு அவர்களைக் குறைவாகத் தெரியும்படி அவர் செய்தார், மேலும் அதேபோல் அவர்களுடைய கண்களுக்கு உங்களைக் குறைவாகத் தெரியும் படியும் செய்தார். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தைக் கடவுள் நிறைவேற்ற நாடினார். தீர்மானங்கள் அனைத்தும் கடவுள்-ஆல் செய்யப்படுகின்றன.