Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:44 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

மேலும் அந்நேரம் வந்து அவர்களை நீங்கள் சந்தித்த போது, உங்களுடைய கண்களுக்கு அவர்களைக் குறைவாகத் தெரியும்படி அவர் செய்தார், மேலும் அதேபோல் அவர்களுடைய கண்களுக்கு உங்களைக் குறைவாகத் தெரியும் படியும் செய்தார். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தைக் கடவுள் நிறைவேற்ற நாடினார். தீர்மானங்கள் அனைத்தும் கடவுள்-ஆல் செய்யப்படுகின்றன.

[8:43] (முஹம்மதே) உம்முடைய கனவில் அவர்களை, எண்ணிக்கையில் குறைவாகத் தெரியும்படி கடவுள் செய்தார். அவர்களை அதிக எண்ணிக் கையில் தெரியும் படி அவர் செய்திருந்தால், நீங்கள் தோல்வியடைந்திருப்பீர்கள், மேலும் உங்களுக் குள் நீங்கள் தர்க்கம் புரிந்து கொண்டிருந் திருப்பீர்கள். ஆனால் கடவுள் இந்நிலைமையைப் பாதுகாத்தார். அவர் ஆழ்மனதின் எண்ணங்களையும் அறிகின்றவர்.

[8:45] நம்பிக்கை கொண்டோரே, ஒரு படையினை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, நீங்கள் உறுதியுடன் நிற்க வேண்டும். மேலும் கடவுள்-ஐ அதிகமதிகம் நினைவு கூர்ந்திட வேண்டும்.