குர்ஆன் 8:45 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நம்பிக்கை கொண்டோரே, ஒரு படையினை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, நீங்கள் உறுதியுடன் நிற்க வேண்டும். மேலும் கடவுள்-ஐ அதிகமதிகம் நினைவு கூர்ந்திட வேண்டும்.
[8:44] மேலும் அந்நேரம் வந்து அவர்களை நீங்கள் சந்தித்த போது, உங்களுடைய கண்களுக்கு அவர்களைக் குறைவாகத் தெரியும்படி அவர் செய்தார், மேலும் அதேபோல் அவர்களுடைய கண்களுக்கு உங்களைக் குறைவாகத் தெரியும் படியும் செய்தார். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட திட்டத்தைக் கடவுள் நிறைவேற்ற நாடினார். தீர்மானங்கள் அனைத்தும் கடவுள்-ஆல் செய்யப்படுகின்றன.
[8:46] நீங்கள் கடவுள்-க்கும் மேலும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தோல்வியுற்று உங்களுடைய பலத்தைச் சிதறடித்து விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக்கிடையில் தர்க்கம் செய்யாமல் இருக்க வேண்டும். நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.