குர்ஆன் 8:46 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நீங்கள் கடவுள்-க்கும் மேலும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தோல்வியுற்று உங்களுடைய பலத்தைச் சிதறடித்து விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக்கிடையில் தர்க்கம் செய்யாமல் இருக்க வேண்டும். நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.
[8:45] நம்பிக்கை கொண்டோரே, ஒரு படையினை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, நீங்கள் உறுதியுடன் நிற்க வேண்டும். மேலும் கடவுள்-ஐ அதிகமதிகம் நினைவு கூர்ந்திட வேண்டும்.
[8:47] கடவுள்-ன் பாதையைப் பின்பற்றுவதிலிருந்து உண்மையில் மற்றவர்களை பின்வாங்கச் செய்தவர்களாக, காட்டிக் கொள்வதற்காக மட்டுமே விருப்பமின்றி தங்களுடைய வீடுகளைத் துறந்து வந்தவர்கள் போன்று இருக்காதீர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முழுவதும் அறிகின்றார்.