Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:47 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

கடவுள்-ன் பாதையைப் பின்பற்றுவதிலிருந்து உண்மையில் மற்றவர்களை பின்வாங்கச் செய்தவர்களாக, காட்டிக் கொள்வதற்காக மட்டுமே விருப்பமின்றி தங்களுடைய வீடுகளைத் துறந்து வந்தவர்கள் போன்று இருக்காதீர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முழுவதும் அறிகின்றார்.

[8:46] நீங்கள் கடவுள்-க்கும் மேலும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தோல்வியுற்று உங்களுடைய பலத்தைச் சிதறடித்து விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக்கிடையில் தர்க்கம் செய்யாமல் இருக்க வேண்டும். நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். உறுதியாய் விடாமுயற்சியுடன் இருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.

[8:48] சாத்தான் அவர்களுடைய காரியங்களை அவர் களுடைய கண்களுக்கு அழகாக ஆக்கிவிட்டான், மேலும், “இன்றைக்கு உங்களை எந்த மனிதர் களாலும் தோற்கடித்து விட முடியாது,” மேலும் “உங்களுடன் நானும் சேர்ந்து போரிடுகின்றேன்,” என்று கூறினான். ஆனால் இருபடையினரும் ஒருவரையொருவர் எதிர் கொண்டவுடன், “நான் உங்களைக் கைவிடுகின்றேன் நீங்கள் பார்க்காத வற்றை நான் பார்க்கின்றேன். நான் கடவுள்-க்கு பயப்படுகின்றேன். கடவுள்-ன் தண்டனை அச்சமூட்டக் கூடியது” என்று கூறியவாறு தன் குதிகால்களால் திரும்பி ஓடி விட்டான்.