Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:48 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

சாத்தான் அவர்களுடைய காரியங்களை அவர் களுடைய கண்களுக்கு அழகாக ஆக்கிவிட்டான், மேலும், “இன்றைக்கு உங்களை எந்த மனிதர் களாலும் தோற்கடித்து விட முடியாது,” மேலும் “உங்களுடன் நானும் சேர்ந்து போரிடுகின்றேன்,” என்று கூறினான். ஆனால் இருபடையினரும் ஒருவரையொருவர் எதிர் கொண்டவுடன், “நான் உங்களைக் கைவிடுகின்றேன் நீங்கள் பார்க்காத வற்றை நான் பார்க்கின்றேன். நான் கடவுள்-க்கு பயப்படுகின்றேன். கடவுள்-ன் தண்டனை அச்சமூட்டக் கூடியது” என்று கூறியவாறு தன் குதிகால்களால் திரும்பி ஓடி விட்டான்.

[8:47] கடவுள்-ன் பாதையைப் பின்பற்றுவதிலிருந்து உண்மையில் மற்றவர்களை பின்வாங்கச் செய்தவர்களாக, காட்டிக் கொள்வதற்காக மட்டுமே விருப்பமின்றி தங்களுடைய வீடுகளைத் துறந்து வந்தவர்கள் போன்று இருக்காதீர்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முழுவதும் அறிகின்றார்.

[8:49] நயவஞ்சகர்களும், தங்களுடைய உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருப்பவர்களும், “ இம் மக்கள் தங்கள் மார்க்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டனர்” என்று கூறினார்கள். ஆயினும், கடவுள்-இடம் ஒருவர் பொறுப்பை ஒப்படைத்தால், பின்னர் கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.