குர்ஆன் 8:49 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நயவஞ்சகர்களும், தங்களுடைய உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருப்பவர்களும், “ இம் மக்கள் தங்கள் மார்க்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டனர்” என்று கூறினார்கள். ஆயினும், கடவுள்-இடம் ஒருவர் பொறுப்பை ஒப்படைத்தால், பின்னர் கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[8:48] சாத்தான் அவர்களுடைய காரியங்களை அவர் களுடைய கண்களுக்கு அழகாக ஆக்கிவிட்டான், மேலும், “இன்றைக்கு உங்களை எந்த மனிதர் களாலும் தோற்கடித்து விட முடியாது,” மேலும் “உங்களுடன் நானும் சேர்ந்து போரிடுகின்றேன்,” என்று கூறினான். ஆனால் இருபடையினரும் ஒருவரையொருவர் எதிர் கொண்டவுடன், “நான் உங்களைக் கைவிடுகின்றேன் நீங்கள் பார்க்காத வற்றை நான் பார்க்கின்றேன். நான் கடவுள்-க்கு பயப்படுகின்றேன். கடவுள்-ன் தண்டனை அச்சமூட்டக் கூடியது” என்று கூறியவாறு தன் குதிகால்களால் திரும்பி ஓடி விட்டான்.
[8:50] வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்தும் போது மட்டும் நம்ப மறுப்பவர்களை உங்களால் பார்க்க முடிந்தால் அவர்கள் முகங்களிலும், அவர்களது பின்புறங்களிலும் அவர்களை அவர்கள் அடிப்பார்கள்: “நரகின் தண்டனை யைச் சுவையுங்கள்.